சீறிப்பாய்ந்த 654 காளைகள்…. மாடுகள் முட்டி 32 பேர் காயம்…. சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவாயி குளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், சேலம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 654 காளைகள் கலந்து கொண்டது. இதனையடுத்து 250 மாடு பிடி வீரர்கள் களமிறங்கினர்.

இந்நிலையில் காளைகள் முட்டியதால் மாடுபிடி வீரர்கள் உள்பட 32 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்களுக்கும், பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், டேபிள், சைக்கிள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply