மத்திய, மாநில அரசு… ரூ.1.24 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்… புதிய சாதனை…!!!

மத்திய மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கொரோனா காலத்தில் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை  ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது . மேலும் இந்த கொரோனா வைரஸ்சாலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள போக்குவரத்து, ரயில் மற்றும் விமான சேவை ஆகியவை அனைத்தும் முடங்கி இருந்தது. அதன் பிறகு கொரோனாவின்பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து  மே மாதம் படிப்படியாக போக்குவரத்து மற்றும் விமானம், ரயில் போன்ற அனைத்தும் சேவைகளும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய. மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி  வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் கொரோனா தளவுர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்க தொடங்கியது. இது பற்றி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கடந்த மாதம் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து மார்ச் 31ஆம் தேதி வரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு 1லட்சத்து 23 ஆயிரத்து 902 கோடி ரூபாய் வரி வசூல் அதிகரித்து உள்ளதாக  வருவாய் துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 6-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய ஜிஎஸ்டி 22 ,90,73கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 29 ஆயிரத்து 369 கோடி ரூபாய், ஐ ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலிக்க பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்று  ஜிஎஸ்டி வரி வருவாய் துறை அறிவித்துள்ளது .