3,101 ரயில் பெட்டிகள் தயாரிப்பு… இலக்கை எட்டிய ஐசிஎப்…!!!!

பெரம்பலூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டில் 3201 ரயில் பெட்டிகள் தயாரித்து இலக்கை எட்டி உள்ளது.

ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 1955ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 500க்கும் மேற்பட்ட வடிவங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ‘ரயில் 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’  அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஐசிஎப் பில் கடந்த இரு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது ரயில் பெட்டிகள் தயாரிப்பு அதிகமாகியுள்ளது.

ஐசிஎப் 2021- 22 ஆம் நிதியாண்டில்3,101 பெட்டிகள் தயாரிப்பு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 31 நெடுந்தொலைவு மின் தொடர்களுக்கான 248 பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயின்  4 தொடர்களுக்கான 32 பெட்டிகள், விபத்து நிவாரண ரயில்களுக்கான  ஆறு தொடர்கள், 50 டீசல் ரயில் தட பரிசோதனைக்குப் ரயில் பெட்டிகள், ஆய்வு பெட்டிகள், 2,639 எஸ்பி என்னும் நவீன ரயில் பெட்டிகள் இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 83 பயணிகள் ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு தயாரிக்கப்பட்ட இரண்டு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட டீசல் மின் தொடர்களுக்கான 26 பெட்டிகள் என்று மொத்தம் 3,101 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஐசிஎப் அதிகாரிகள் கூறியபோது, ஐபிஎல் 2019 – 20 ஆம் நிதியாண்டில் 4,200 பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தது. கொரோனா  பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைவாக இருந்துள்ளது. தற்போது ரயில் பெட்டி தயாரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.  2021- 22 ஆம் நிதியாண்டில் 3,100 பெட்டிகள் தயாரித்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டிற்கான இலக்கு விரைவில் நிர்ணயிக்கப்படும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *