300 ஏக்கரில் பிரம்மாண்டம்…. அம்பானியின் அடுத்த வீடு…. செலவு எவ்வளவு தெரியுமா….?

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின்  பிரம்மாண்ட வீட்டின் செலவு பற்றி விபரம் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு மும்பையில் ‘அண்டிலியா’ என்னும் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. ஆனால் தற்போது அவர் தன்னுடைய குடும்பத்தினருக்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றை லண்டனில் கட்டி வருகிறார். பக்கிங்காம்ஷயரில் உள்ள 300 ஏக்கரில் அந்த வீடு கட்டப்பட்டு வருவதாக மிட் டே பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் அவருடைய குடும்பத்தினர் அதிகநேரம் மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொழுது போக்கி வந்தனர். எனவே ஒரு சிறிய மாறுதலுக்காக இந்த பிரம்மாண்ட வீட்டை கட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் 592 ரூபாய் கோடிக்கு அந்த வீட்டை வாங்கியதாகவும், அதில் 49 படுக்கையறைகள், ஓய்வு அறைகள், விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளங்கள் மற்றும் மருத்துவ வசதிகளும் அந்த ஆடம்பர வீட்டில் இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் லண்டனில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட வீடு தங்களுடைய பொழுது போக்கிற்காக தான். அங்கு குடியேறும் திட்டம் ஏதும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *