கொடூர தாக்குதலில் ரஷ்ய படைகள்…. 30 குடியிருப்பு கட்டிடங்கள் அடியோடு தகர்ப்பு…. தகவல் வெளியிட்ட உக்ரைன் அரசு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதோடு தேவையான ஆயுத உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றது. இதனால் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இதனிடையே உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா நகரில் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளது. இதில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தும் 7 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் மார்க்கெட், ரயில் நிலையங்கள், மற்றும் தனியார் விடுதிகள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply