வெளியே சென்ற தொழிலாளி…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்து சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே சாமி நகரில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான மிக்கேல்ராஜ் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாப்பிள்ளையூரணி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென வந்த 3 வாலிபர்கள் மிக்கேல்ராஜை வழிமறித்தனர். அதன்பிறகு கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து மிக்கேல்ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பழைய காயல் பகுதியில் வசிக்கும் ராஜேஷ், பாஸ்கர், கார்த்தி ஆகிய மூன்று பேரும் இணைந்து செல்போனை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *