கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. நடந்தது என்ன…? சிறுவன் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் அருள்செல்வன்-கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய அபிநாத் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அபிநாத் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அபிநாத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் அருள்செல்வனின் வீட்டிற்கு அருகில் இருக்கும் தரைக்கு கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகமடைந்த அருள்செல்வனின் குடும்பத்தினர் கிணற்றை பார்த்தபோது அபிநாத் பிணமாக மிதந்ததை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அபிநாத் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தானா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply