உ.பியில் 3 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” செய்து கொலை – உடற்கூறு ஆய்வு அறிக்கை..!!

உத்திர பிரதேசத்தில் சிறுமி கொலை தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது  

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவரின் டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர்  10,000 ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் கொடூரமாக கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை கொலை செய்து தங்களது வீட்டின் அருகே புதைத்து வைக்க, மோப்ப நாயின் உதவியுடன் சிறுமி உடலை கைப்பற்றினர்.

Image result for Mutilated Body Of 3-Year-Old Girl Found In Aligarh; Cops Probe: Report

இதையடுத்து குழந்தையை கொன்றவர்களை கண்டுபிடிக்க 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை  மாநில அரசு நியமித்தது. குற்றவாளிகள் ஷாகித், அஸ்லாம், ஷாகித்தின் சகோதரர் மெஹாந்தி, மெஹாந்தியின் மனைவி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் குழந்தையை தாங்கள் கொன்றதாக ஒப்புக் கொண்டனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image result for Mutilated Body Of 3-Year-Old Girl Found In Aligarh; Cops Probe: Reportஇந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடற்கூறு அறிக்கை வெளியானது. இதில் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விலா எலும்புகளிலும், இடது காலில் எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் என உடற்கூறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தடவியல் அறிக்கையும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது  உறுதியானது. சிறப்பு விசாரணை குழுவினர் சிறுமி கொலை தொடர்பாக மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *