நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகளில் இளைய மகனுக்கு 3 வயது ஆகிறது. நேற்று காலை ரம்யா தனது 3 வயது மகனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல தேடியுள்ளார். எங்கு தேடியும் மகனை காணவில்லை. இதைத்தொடர்ந்து விக்னேஷ் மற்றும் ரம்யா காவல்துறையில் புகார் அளித்தனர். இதன் பெயரில் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுவனின் எதிர் வீட்டில் இருந்த தங்கம்மாள் என்ற பெண் காவல்துறையினரை கண்டதும் பதற்றத்துடன் வெளியே ஓடினார். இதைக் கண்ட காவல் துறையினர் சந்தேகம் அடைந்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது ரத்த கரையுடன் கூடிய ஒரு சாக்குப்பை இருந்துள்ளது. சாக்குப்பயினை திறந்து பார்த்தபோது சிறுவன் கொலை செய்யப்பட்ட பிணமாக கிடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் துடிதுடித்து கதறி அழுதனர்.
மேலும் தப்பியோடிய அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.