வாலிபர்கள் செய்த செயல்….. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆட்டை திருட முயற்சித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி துரை, முருகன், இசக்கிமுத்து ஆகிய மூன்று பேரும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் சின்னதுரைக்கு சொந்தமான ஆட்டை திருட முயற்சித்துள்ளனர்.

அப்போது சின்னதுரை பொது மக்களின் உதவியோடு 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த ஆடு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *