சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் செல்வம், சிங்காரம், இளங்கோ ஆகிய 3 பேரும் மளிகை கடைகளில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *