“இப்பதான் சிக்கி இருக்காரு” காரில் சென்ற வரை கடத்திய கும்பல்…. சென்னையில் பரபரப்பு

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபரை தம்பதியினர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி கருணாநிதி தெருவில் சிவராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கீழ்கட்டளை பகுதியில் குளிர்பானக் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் புழுதிவாக்கம் ரயில்வே நிலையம் அருகே இவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றனர். இதுகுறித்து பரங்கிமலை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருந்த சிவராமனின் தனிப்படையினர் மீட்டு அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி விருதுநகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் 12 லட்சமும், திருத்தணியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் 9 லட்சம்,  வரை சிவராமன் மோசடி செய்ததுள்ளார்.  எனவே வெகு நாட்களுக்கு பிறகு சிக்கிய சிவராமனை கடத்தியதாக ராதாகிருஷ்ணன் அவரது மனைவி லட்சுமி, கிருஷ்ணன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *