முயற்சியால் முன்னேறிய மாணவி….. 3 கோடி ருபாய் கல்வி உதவித்தொகை…. குவியும் பாராட்டு….!!!!

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை படிப்பதற்காக மாணவி ஒருவர் 3 கோடி ரூபாய்  கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிபாளையத்தில் சாமிநாதன்-சுகன்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்வேகா (17) என்ற மகளும், 7-வது படிக்கும் அச்சுதன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ஸ்வேகா தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். மேலும் தன் 14-வது வயதில் இருந்து ஸ்வேகா டெக்ஸ் டெரிட்ரி குளோபல் எனும் நிறுவனத்தில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிறுவனம் கிராமப்புறம் அல்லது தொலை தூர நகரங்களை சேர்ந்த மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாக இயங்கி வருகிறது.
இதன் மூலமாக ஸ்வேகா அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கு 3 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையை பெற்றுள்ளார். இது தொடர்பாக மாணவி ஸ்வேகா கூறியபோது “ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பயின்றேன். நான் பிளஸ்-1 சேருவதற்கு முன்பே இந்த அமைப்பில் சேர்ந்தேன். அப்போது ஆன்லைனில் உலகளாவிய தேர்வு நடைபெற்றது. இதில் நான் சிறப்பிடம் பெற்றதற்காக எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது” என்று கூறினார். இவ்வாறு கிராமப்புறத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றதற்காக அவரது உறவினர்களும், கிராம மக்களும் ஸ்வேகாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *