சாலை தடுப்பில் மோதி பக்கத்து சாலைக்குள் சென்ற கார் விபத்தில் 3 பேர் பலி..!!

தெலுங்கானாவில் கார் ஓன்று சாலை தடுப்பு மீது மோதி, அடுத்த சாலைக்குள் புகுந்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில்  3 பேர் பலியாகியுள்ளனர். 

தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் – மல்கஜ்கிரி மாவட்டத்தின், கரீம் நகர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது.  மோதிய வேகத்தில் பக்கத்து சாலைக்குள் புகுந்த கார் அந்த சாலையில் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது.

Image result for Three people were killed in a road accident in  another vehicle in Telangana cctv

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எதிர் திசையில் வந்த காரில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்து காட்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சியை  போலீசார் தற்போது வெளியிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *