பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல்…. லாரி உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!

லாரி உரிமையாளரை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் பகுதியில் லாரி உரிமையாளர் ரஜினிகாந்த் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் முன்பு 3 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் ரஜினிகாந்தை பார்த்தவுடன் தகராறு செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கும்பல் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை அவர் மீது தீ வைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ரஜினிகாந்த் ஒதுங்கிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து ரஜினிகாந்த் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சூர்யா, கிஷோர், சதீஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *