இருசக்கர வாகனத்தில் வந்து உரசிய வாலிபரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மா.பொ.சி நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சசி ராஜன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பிரைட், ராம், அன்பு ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் லேசாக உரசி உள்ளது. இதனால் அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த 3 பேரும் சசி ராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த சசி ராஜனை அவ்வழியாக சென்றவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சசிதரன் திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பிரைட், ராம், அன்பு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.