“3 வயது குழந்தையின் தலைமுடியை இழுத்து அடித்த திமுக செயலாளர் “ஆத்திரத்தில் புகார் அளித்த தந்தை !!!..

திருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் 

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்  அழகுமணி.இவருக்கும் அப்பகுதியை  சேர்ந்த  திமுகவின் முன்னாள்  நகர செயலாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே  நிலத்தகராறு என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகுமணியின் மூன்று  வயது குழந்தையை ரவிச்சந்திரன் மற்றும்  டிடிவி தினகரனின் ஆதரவாளர் சரவணன் ஆகிய இருவரும்  துணியை  கிழித்து தலைமுடியை இழுத்து அடித்ததாக அழகுமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  ரவிச்சந்திரன் மற்றும் சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.