விநாயகர் சதுர்ச்சி பண்டிகை பாதுகாப்பை யொட்டி நாளை சென்னையில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் இலங்கை தாக்குதல் நடத்தியவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவி கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார் படுத்தப்படுள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தலால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்தும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 4 கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பாதுகாப்பையொட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி 3 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகின்றது.