மத்திய பிரதேசம் மாநிலத்தில் சச்சின் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் மீராவுக்கு 25 வயது ஆகும் நிலையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் சமீபத்தில் இருவருடைய வீட்டிற்கும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மீராவுக்கு அவருடைய வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். இதன் காரணமாக காதல் ஜோடி இருவரும் மன உளைச்சலில் இருந்தனர். இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் விபரீதமான ஒரு முடிவெடுத்தனர்.
அதாவது இருவரும் சேர்ந்து ஒரு தற்கொலை ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படி மீராவை அவருடைய காதலன் சுட்டுக் கொல்ல வேண்டும். அதன் பிறகு அவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தின்படி மீராவை அவருடைய காதலன் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் சச்சினின் வாடகை வீட்டில் நடந்த நிலையில் துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மீராவை சுட்டுக்கொன்ற பிறகு சச்சின் மனமாறிவிட்டார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது சச்சின் தப்பி ஓட முயற்சி செய்தார். மேலும் அவரை காவல்துறையினர் பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.