ஹரியானா மாநிலத்தில் 3 1/2 வயது பெண் குழந்தையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கை கால்களை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்றரை வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த குழந்தை திடீரென மாலை நேரம் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது இரவு 11 மணிக்கு ரத்த வெள்ளத்தில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர் குழந்தையை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் அவர் பிஞ்சுக் குழந்தையின் கால்களை உடைத்து கொலை செய்துள்ளார். நான்கு தனிப்படை அமைத்து போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.