1939 ஆம் ஆண்டு லினா மடினாவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவருடைய வயிறு வளர்ந்துள்ளதை மருத்துவர்கள் பரிசோதித்து கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். ஆரம்பத்தில் அவருடைய வயிறு வளர்ந்ததை பார்த்த பெற்றோர்கள் அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்த நிலையில் நாளடைவில் வயிறு வீக்கத்தை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உண்மையை அறிந்தனர். மருத்துவர்கள் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் எப்படி இப்படி நடக்கும் என்பது ஆச்சரியப்பட வைத்தது. ஒரு பெண் ஐந்து வயதில் தாய் ஆகிறாள், இது யாராலும் நம்ப முடியாத விஷயமாக இருந்தது. மருத்துவ வரலாற்றில் இளைய தாய் ஐந்தரை வயதில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பிறந்தது. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தார். லினாவின் உடல் மிகவும் சிறியதாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு அறுவை சிகிச்சை செய்தனர்.

குழந்தையின் எடை சுமார் மூன்று கிலோ. குழந்தையை பெற்றெடுக்கும் போது அவரின் வயது 5 ஆண்டுகள் 7 மாதங்கள் மற்றும் 21 நாட்கள் ஆகும். அது மட்டுமல்லாமல் அந்த சிறுமிக்கு மூன்று வயதிலேயே முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டது. ஆனால் அவர் எப்படி கர்ப்பமாகி இருப்பார் என்று சரியான தகவல் எதுவும் தெரியவில்லை. ஆனால் பலர் இந்த முழு சம்பவத்தையும் பற்றி கூறினாலும் எக்ஸ்ரே, வீடியோக்கள், அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை உண்மையில் நடந்ததை நிரூபித்தது.