3-வது அலை, மீண்டும் முழு ஊரடங்கா?…. தமிழகத்தில் அதிர்ச்சி…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க நேரிட்டால் வணிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மூன்றாவது அலையை கட்டுப்படுத்த உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைத்து வணிக பிரதிநிதிகளை இடம்பெற செய்ய வேண்டும். மூன்றாவது அலையை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *