3 மாவட்டங்களில் காலரா அபாயம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் ஆட்டிப்படைத்து வந்தது. தற்போது மீண்டும் கொரானா வேகம் எடுத்து வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் காரைக்காலை ஒட்டி உள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் காலாரா நோய் பரவும் அபாயம் இருப்பதால் கண்காணிப்பை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்திருக்கவும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *