அமெரிக்காவில் தாமஸ் என்ற மூன்று மாத குழந்தைக்கு ரெட்டினோபிளாஸ்டோமா என்ற அரிய வகை கண் புற்றுநோய் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த புற்றுநோயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானதாக இருக்கும் அரிதாக பாதிக்கப்படும். இது போன்ற நோய் பாதிப்புகளில் பொதுவாக குழந்தைகளுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக கண் அகற்றப்பட வேண்டி இருக்கும். ஆனால் தாமசின் விஷயத்தில் அவரது அறிகுறிகள் விரைவாகவே அடையாளம் காணப்பட்டதால் அவருக்கு  கீமோ சிகிச்சை அளிக்கப்பட்ட தற்போது அவர் நலமாக உள்ளார்.