3 மாதமாக அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

அட்டகாசம் செய்த கரடியை வனத்துறையினர் குண்டு வைத்து பிடித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னியட்டி, உயிலட்டி ஆகிய கிராமங்களில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகள் அட்டகாசம் செய்து வந்துள்ளது. மேலும் தேயிலை முட்டைகளை சுமந்து சென்ற தொழிலாளியை கரடிகள் துரத்தியது. கடந்த ஜூலை மாதம் 2 குட்டி கரடிகள் சிக்கிய நிலையில், தாய் கரடி தப்பி ஓடியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். அந்த கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் 2 இடங்களில் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை கரடி கூண்டில் சிக்கியது. இதனை அடுத்து கரடியை கூண்டுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ், கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார், தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் குமார் ஆகியோர் முன்னிலையில் கரடி அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *