3 மாணவ-மாணவிகள் குட்டையில் பிணமாக மீட்பு…. அதிர்ச்சி சம்பவம்…

மத்தியபிரதேச மாநிலம் பாலஹட் மாவட்டம் சீதாபூர் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின் மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர். அப்போது, அந்த பள்ளியில் படித்த மாணவன், 2 மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும், அக்கம்பக்கத்திலும் திவிரமாக தேடினர். அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள குட்டையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *