“3 சதவீதம் கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை”…. மேலூர் துணைத் தலைவர் பேசும் வீடியோ வைரல்….!!!!!

கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை என மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் குறித்து பேசுவது போல் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேலும் ஊராட்சி துணைத்தலைவர் கூறியுள்ளதாவது, ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தர வேண்டும் என கூறுகின்றார்.

அதற்கு ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே பொறியாளருக்கு 50 சதவீதம், மேற்பார்வையாளர்களுக்கு 12 சதவீதம், கணினி பிரிவு என ஒவ்வொருவருக்கும் கமிஷன் கொடுத்திருப்பதாக கூறுகின்றார். அதற்குத் துணைத் தலைவர் கூறியுள்ளதாவது, அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வருகின்றது. ஆனால் நாங்கள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு முறையும் நிதி கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கின்றது. இதனால் மூன்று சதவீத கமிஷனை கட்டாயம் கொடுத்தால் தான் அடுத்த முறை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறுகின்றார். இதுபோல ஒப்பந்ததாரர்கள், துணைத்தலைவர் பேசும் வீடியோ வைரலாகி வருகின்றது.