
சத்தீஸ்கர் மாநிலத்தில் திவாகர் பிந்து தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்திற்கு குடும்பத்துடன் வந்தனர். இதில் திவாகர் பிளம்பராக வேலை பார்த்த நிலையில், பிந்து வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிந்துவுக்கு வேலைக்கு போன இடத்தில் அங்கீத் சாகேத் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் திவாகருக்கு தெரிய வந்ததால் தன்னுடைய வீட்டினை வேறொரு பகுதிக்கு மாற்றினார். இதன் காரணமாக கடந்த 8-ம் தேதி பிந்து தன் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவர்கள் ஒரு நண்பரின் வீட்டில் 3 நாட்களாக தங்கி இருந்த நிலையில் தன் மனைவி காணாமல் போனது தொடர்பாக திவாகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையில் அங்கித்தின் நண்பர் ஒருவர் கடந்த 11ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரை ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார். அங்கு வைத்து அங்கித் தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் அங்கித்தை தலையில் சரமாரியாக கத்தியால் குத்தியதோடு முகத்தில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர். இதனைப் பார்த்த பிந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றதால் அவரையும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூவரை கைது செய்துள்ள நிலையில் தனிப்படை போலீஸ் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.