3 கன்றுகளை ஈன்ற பசுமாடு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

பசுமாடு ஈன்ற 3 கன்றுகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முகமதுபட்டினம் கிராமத்தில் வெள்ளையன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் வெள்ளையன் வளர்த்த பசுமாடு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூன்று கன்றுகளை ஈன்றது. ஒரே நேரத்தில் பசு மாடு 3 கன்றுகளை ஈன்ற செய்தி கிராம மக்களிடையே வேகமாக பரவியது. இதனால் அனைவரும் பசு மற்றும் கன்றுகளை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *