3ஆவது போட்டியில் காயம்…. “4ஆவது டி20 போட்டியில் ஆடுவாரா ரோகித்?”….. வெளியான தகவல்..!!

மூன்றாவது போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா நான்காவது போட்டியில் ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்த நிலையில், ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது..

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 t20 கிரிக்கெட் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீசில்  நடைபெற்று வருகின்றது.. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.. மேலும் மீதமுள்ள இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. நாளை அமெரிக்காவில் நடைபெறும் நான்காவது டி20 போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் காண இருக்கிறது. அதே சமயம் தொடரை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தீவிர காட்டி வருகிறது.

இந்நிலையில் நாளை நடைபெறும் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களம் இறங்குவாரா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் கட்டாயம் ரோகித் சர்மா விளையாடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.. ஏனென்றால் கடந்த மூன்றாவது போட்டியின் போது முதுகு வலியால் பேட்டிங் செய்ய முடியாமல் வெளியேறிய ரோகித் சர்மா நான்காவது போட்டியில் ஆடுவாரா? என்று சந்தேகம் எழுந்த நிலையில், ரோகித் சர்மா காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதால் கட்டாயம் நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியிருப்பது  ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

அதேபோல இந்த தொடரில் மோசமாக பந்து வீசி வரும் ஆவேஷ் கான் மற்றும் பேட்டிங்கில் சொதப்பும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *