“காஷ்மீர் பிரச்சனை” இந்தியாவிற்கு 28 நாடுகள் ஆதரவு… கதி கலங்கி நிக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் பிரச்சனையை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஐநா பொது குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பழக்கத்தை அதிகரிக்கச் செய்து அதை சுட்டிக்காட்டி பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட 28 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.

Image result for india vs pakistan flag

கஷ்மிர் விவகாரம் என்பது இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை என்பதால் இந்தியா பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதோடுமட்டுமில்லாமல் காஸ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவிற்கான ஆதரவை அறிவித்திருக்கிறது. மேலும் பாகிஸ்தான் தெளிவற்ற முடிவுகளை எடுக்கும் நாடு என்று தெரிவித்துள்ளது. முன்னதாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு சபையில் நடந்த விவாதத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்து இருந்தது. அதேசமயத்தில் இந்தியாவிற்கு ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எட்டியுள்ளது.