27 மாநிலம்…. 647 இந்தியர்கள்…. 47 வெளிநாட்டினர்…. 17 உயிரிழப்பு….. கொரோனா பிடியில் இந்தியா …!!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இருந்து 67 பேர் விடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 130 பேரும், கேரளாவில் 137 பேருக்கும் கொரோனாபாதிப்பு உள்ளது. டெல்லியில் 36 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 41 பேருக்கும், கர்நாடகாவில் 55 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது. ராஜஸ்தானில் 41 பேருக்கும்,  தெலுங்கானாவில் 44 பேருக்கும், பஞ்சாபில் 33 பேருக்கும், ஹரியானாவில் 30 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கு கொரோனா  தாக்கம் உள்ளது.

பனி பிரதேசமான லடாக்கில் 13 பேருக்கும்,  தமிழகத்தில் 29 பேருக்கும், அண்டை மாநிலமான ஆந்திராவில் 11 பேருக்கும்,  ஜம்மு-காஷ்மீரில் 13 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 20 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 10க்கும் கொரோனா தொற்று உள்ளது.

உத்தரகாண்டில் 5 பேருக்கும் , ஹிமாச்சலில் 3 பேருக்கும், ஒடிசாவில் 2  பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் பீகாரில் தலா  6 பேருக்கும், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா 1வருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 194 பேரில் 47 பேர் வெளிநாட்டினர் ஆவர். அவர்களில் ஹரியானாவில் 14 பேரும், தெலுங்கானாவில் 10 பேரும், கேரளாவில் 8 பேரும், மகாராஷ்டிராவில் 3 பேரும், ராஜஸ்தானில் இரண்டு பேரும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *