“27 சென்ட் நிலம்” அதிமுக மாஜியின் தில்லுமுல்லு வேலை….. கணவன்-மனைவியின் பகீர் புகார்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே இந்திரா நகர் பகுதியில் கௌசல்யா- ராஜேந்திரன் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாப்பம்பாடி கிராமத்தில் 27 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தின் தற்போதைய திப்பு ரூபாய் 2 கோடி ஆகும். இந்த நிலத்தை தன்னுடைய உறவினர் ஒருவருக்கு போலி பத்திரம் மூலம் தாரமங்கலம் பகுதியின் அதிமுக  முன்னாள் யூனியன் சேர்மன் சின்ன கண்ணு மாற்றி கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.

அதோடு நிலத்தில் புதிதாக கட்டிடத்தை எழுப்பியதால் கணவன்-மனைவி இருவரும் சென்று நியாயம் கேட்டபோது அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கணவன்-மனைவி இருவரும் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கௌசல்யா மற்றும் ராஜேந்திரன் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் எங்களுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை முன்னாள் சேர்மன் ஒருவர் அபகரித்து விட்டதால், அவரிடம் இருந்து எங்களுடைய நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எங்களுக்கு கொலை மிரட்டல் வருவதால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஏற்கனவே அதிமுக கட்சியில் உட்கச்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியின் கோட்டையாக  கருதப்படும் சேலத்தில் முன்னாள் சேர்மனால் தற்போது புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.