12 ராசிக்காரர்களே …. மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க… முழு ராசி பலன் அறிய.!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று சுய பெருமை பேசுபவரிடம் விலகி இருப்பது நல்லது. கூடுதல் செயல்திறனும் உழைப்பு மட்டுமே இன்று இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனை  கொடுக்கும். இன்று சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒருவரின் பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

நட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை  கொடுக்கும். நீங்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து இன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். தடைகள் விலகி செல்லும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்று நண்பர்களினால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று முடிந்தால் வெள்ளை நிறத்தில் ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். இன்று தீபாவளி என்பதால் உங்களுடைய கஷ்டங்களையும், பிரச்சினைகளையும், துன்பத்தையும் தூக்கி போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி தீபாவளியை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

ரிஷபம் : 

செய்யும் வேலையை மிகவும் சிறப்பாக செய்யக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று பகைவரால் உருவான தொந்தரவு விலகிச்செல்லும். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். வளர்ச்சியும் பணவரவும் இன்றைக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். புத்திரர் வெகுநாள் விரும்பி கேட்ட  பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பல வகையிலும் உங்களுக்கு நன்மை ஏற்படும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் சாதகமான போக்கு இருக்கும். கடினமான வேலைகளை கூட சுலபமாக இன்று முடிப்பீர்கள்.

வரவும் செலவும் சரியாக இருக்கும். இன்று நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் அவசரம் மட்டும் காட்ட வேண்டாம். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். இன்று தீபாவளி தினம் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும், துன்பங்களையும் தூக்கிப்போட்டுவிட்டு மன நிம்மதியாக தீபாவளியை  மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

மிதுனம் : 

சிறப்பான சிந்தனை திறன் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் உற்சாகம் நிறைந்த பணி நல்ல பலன்களை பெற்றுக்கொடுக்கும். உறவினர் நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சிகள் உருவாகும். பண பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். நீங்களும் உடல்நிலையை கொஞ்சம் கவனமாக பார்த்துக் -கொள்ளுங்கள். சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தவர் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மட்டும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உங்களுடைய கௌரவம் உயரும். மற்றவர்களிடமும் நல்ல மதிப்பை பெறக்கூடும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் அனைத்து பிரச்சினைகளையும் தூக்கி போட்டுவிட்டு குடும்பத்தாருடன் மனம் மகிழ்ச்சியாக  சந்தோசமாக தீபாவளியை கொண்டாடுங்கள். அதுபோலவே முடிந்தால் இன்று நீங்கள் சிவப்பு நிற ஆடையோ  அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

கடகம் : 

நல்ல தோற்றப் பொலிவை கொண்ட கடகராசி அன்பர்களே..!! இன்று பணிகளுக்கு தகுந்த முன் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனம் இருக்கட்டும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதி ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பணவரவு உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் மாற்றங்களை செய்ய நேரிடலாம். இன்று விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். மனம் மகிழும் படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

இன்று எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் போது கூர்ந்து கவனித்து ஆராய்ந்து பார்த்து பின்னர் முடிவெடுத்து செய்வது மிகவும் நன்மையை கொடுக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் கலகலப்பும் இருக்கும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், துன்பங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி தானே வந்து செல்லும். நமக்கு அது போதும். அது போலவே முடிந்தால் இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விஷயங்களுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் : 

செய்யும் செயலை மிகவும் நேர்த்தியாக செய்யக்கூடிய சிம்மராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று இருந்த தடைகள் விலகி உங்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள்  உடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.

உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. மிகவும் முக்கியம் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்று அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று உங்களுக்கு மனதிற்கு பிடித்த பொருட்ளை வாங்கி மகிழும் வாய்ப்பு இருக்கும். எதுவாக இருந்தாலும் சரி இன்று தீப ஒளி  திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகள், துன்பங்கள் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மனதார தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்கள் மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி தானே வந்துவிடும். அதுபோலவே முடிந்தால் இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடையோ, வெள்ளை நிறத்தில் கை குட்டையையோ எடுத்து சொல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

கன்னி : 

எதைப்பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். உங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் முக்கிய தேவைக்கு கொஞ்சம் சேமித்து வைப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். இன்று நீங்கள் மன மகிழ்வாக காணப்படுவீர்கள். பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்புகள் இன்று இருக்கும். அந்த விஷயத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் நன்மைகள் நடக்கும். இன்றைய நாள்  ஓரளவு சிறப்பு இருக்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழலும் இருக்கும். இன்று கலகலப்பான தன்மை நிலவும். எது எப்படியாக இருந்தாலும் இந்த தீபஒளி திருநாளில் உங்களுடைய பிரச்சினைகளையும், துன்பங்களையும் தூர தூக்கி போட்டுவிட்டு இன்று தீபாவளியை ரொம்ப மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே முடிந்தால் இன்று சிவப்பு நிறத்தில் ஆடையோ  அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ  வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து காரியமும்  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை :

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

துலாம் : 

எதிரிகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடக்கூடிய துலாம்ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு நல்ல முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறையில் நிதானப் போக்கை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் தான் இன்று பண வரவு இருக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் கூடும். புத்தி தெளிவு ஏற்படும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி உங்களுக்கு கிடைக்கும்.

சந்தோஷமான மனநிலை இருக்கும். மேலிடத்தில் இருந்து நல்ல தகவல்கள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். நீங்கள் நண்பர்கள் மூலம் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கலகலப்பான சூழலும் நிலவும். எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஒளி  திருநாள் என்பதால் உங்களுடைய மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த பிரச்சினையாக இருக்கட்டும் அதை தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை மனம் மகிழும்படி கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே நீங்கள் இன்று மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் : 

தனது அபார சிந்தனைத் திறன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவி மகிழ்ச்சியை கொடுக்கும். பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். ஆடம்பர வகையிலான பணச் செலவை மட்டும் தவிர்த்துவிடுங்கள். தேவையான பொருட்களை மட்டும் வாங்கி விடுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாகவே இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பருடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மனம் மகிழ்ச்சியாகவே இருக்கும். எல்லா துறைகளிலும் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.

இன்று நண்பர்கள் மூலம் முக்கிய பிரச்னைக்கு முடிவுகட்டும் நாளாகவும் இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் பேசும் பொழுது கொஞ்சம் அன்பாக பேசுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் கொஞ்சம் வரக்கூடும் என்பதால் அந்த விஷயத்தில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். சரிங்க எது எப்படியாக இருக்கட்டும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி சந்தோசமாக இன்று நீங்கள் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போலவே இன்று மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு : 

கஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபர் ஒருவரை முக்கியமான இடத்தில் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக கையாளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வெற்றியும் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஆதரவால் மிகவும் சந்தோசமாக காணப்படுவார்கள். அடுத்தவரின் உதவிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று உங்களுடைய செயல் திறனும் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களின் வருகை இருக்கும்.

அதனால் மகிழ்ச்சி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். பெண்களால் இன்று உங்களுக்கு லாபம் இருக்கும். மனதை மட்டும் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று  இந்த தீபாவளி திருநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை வைத்துக்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மகரம் : 

உயர்வான சிந்தனையும் தெய்வ பக்தியும் கொண்ட மகர ராசி அன்பர்களே…!!இன்று மனதில் புதிய நம்பிக்கை உருவாக்கும். உங்களுடைய செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலமான சூழ்நிலை உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நல்ல யோகமான பலன்களை இன்று நீங்கள் அனுபவிக்க கூடும். இன்று குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மிகக் கவனமாகக் கையாண்டால் அந்த பிரச்சினை சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடும்.

அதனாலேயே உங்களுக்கு கோபம் தலைதூக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நன்மை கொடுக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் சரி இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை நீங்கள் மனம் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

கும்பம் :

எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரணமான அருளை கொண்ட கும்பராசி அன்பர்களே..!! இன்று உறவினரிடம் உங்கள் மீது இருந்த மனஸ்தாபம் சரியாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். பணவரவில் திருப்திகரமான நிலைமை ஏற்படும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் உங்கள் கைக்குக் கிடைக்கும். இன்று தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி வரும். தனவரவும் தாராளமாகவே இருக்கும் நீங்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றியும் காட்டுவீர்கள். உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். அதை மட்டும் நீங்கள் இன்று கடைபிடியுங்கள்.

பணவரவு தாராளமாகவே இருக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். மனம் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் இன்று நீங்கள் நல்ல திருப்பங்களை சந்திக்க கூடும். பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மனமும் மகிழ்ச்சியாக காணப்படும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை மனமகிழ்ச்சியுடன் குடும்பத்தாருடன் கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மீனம் : 

தனது தெளிவான பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய மீனராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் குறை சொல்ல காத்திருக்கக் கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களில் சுறுசுறுப்பு அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் புத்துணர்ச்சி பெருகும். இன்று நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனைத்து விஷயங்களும் முன்னேற்றமாக இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் வேலை சுமை கொஞ்சம் இருக்கும். நன்மைகள் அனைத்துமே உங்களுக்கு இன்று கிடைக்கும். காரியத்தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அந்த செய்தி உங்களுக்கு மனதை மகிழ்விக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும்.

வீண் மனக்கவலை மட்டும் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். நீங்கள் யாருக்கும் இன்று பஞ்சாயத்துக்கள் பண்ண வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாக்கு வன்மையால் நல்ல காரியங்கள் இனிதே நடக்கும். இன்று ஓரளவு மனம் அலை பாய கூடிய சூழலும் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பட்டாசு வெடிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீபஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், மனக் கஷ்டங்களையும் துன்பத்தையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருங்கள். அது போதும். முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *