“மெக்சிகோ பெட்ரோல் குண்டு தீ விபத்து” பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 

மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாகாணத்தில் உள்ள  வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் (Coatzacoalcos) ஒரு இரவு விடுதியில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Image result for 26-people-killed-in-bomb-blast-at-nightclub-in-coatzacoalcos--mexico

இந்த  தீ விபத்தில்  23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீக்காயங்களுடன்  13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.