கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட 25 வீடுகள்… தங்க இடம் வேண்டும்… வேதனையுடன் கிராம மக்கள் கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாதி அளவிற்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதிகளை முழுமையாக அரித்து உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சாலைகள் கடல் அரிப்பால் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். கடல் சீற்றத்தால் தினம்தோறும் வீடுகள் சேதம் அடைந்து வருவதாக புகார் அளிக்கும் மீனவர்கள் இடத்தை பாதுகாக்கவும் குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.