25 லட்சம் ஓட்டுநர்களுக்கு பயிற்சி…. மாருதி சுஸுகி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுஸுகி. இந்நிறுவனம் பல்வேறு வகையான மாடல்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 10 கார்களுக்கான பட்டியலில் மாருதி சுஸுகி கார்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கார் விற்பனை மட்டுமல்லாமல் கார்களுக்கான நல்ல ஓட்டுநர்களை தயார் செய்வதிலும் இந்த நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. நிறுவனம் சார்பாக மாருதி சுஸுகி டிரைவிங் ஸ்கூல் என்ற பெயரில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இந்தப் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 500 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிலையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் மேலும் பலருக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்கவும், சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றவும் என் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்காக 2025-ஆம் ஆண்டுக்குள் சுமார் 25 லட்சம் பேருக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் வாயிலாக இதுவரையில் 17 லட்சம் பேருக்கு மேல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 242 நகரங்களில் இதன் ஆக்கிரமிப்பு உள்ளது.

இதன் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது கார் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் அதனை குறைக்கவும் தரமான ஓட்டுனர் பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெறும் ஓட்டுனர் பயிற்சி மட்டுமல்லாமல் சாலை விதிகள், வாகன பராமரிப்பு,போக்குவரத்து தொடர்பான புரிதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *