இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது …!!

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 290 பேர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இலங்கையின்  முக்கிய நகரம் உட்பட பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை போலீசார் கைது செய்யப்பட்டவர்களின் விவரம் பற்றி எதையும் வெளியிடவில்லை. மேலும் இது குறித்து இலங்கை அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.