சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் 24 மணி நேரம் அவரை தூங்கவிடாமல் கேட்ட 12 கேள்வியையே திருப்பி திருப்பி கேட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக வழக்கறிஞர் கபில்சிபில் குற்றம் சாட்டியுள்ளார்.
சிபிஐ_யின் 3 மணி நேர விசாரணையை தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். இதையடுத்து சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கும், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில் சிபில்க்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக சிபிஐ தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், தற்போது கபில் சிபில் வாதாடி வருகிறார். அதில்,

விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்று கூறுகிறீர்கள் இவ்வளவு நாள் சிபிஐ என்ன செய்து கொண்டு இருந்தது என்று அதிரடியாக வாதத்தை தொடங்கினார். மேலும் இது ஒரு கூட்டு சதி என்றும் சிதம்பரம் ஜாமீனில் இருந்தாலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும் தெரிவித்தார். நேற்று அவசர அவசரமாக கைது செய்த சிபிஐ இரவில் விசாரணை செய்யாமல் பகலில் தான் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போ ஏன் அவசர கைது என்று கேள்வி எழுப்பினார்.
வெறும் 12 கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளனர்.சிபிஐ என்னென்னெ கேள்விகளை கேட்டார்கள் என்பதை இங்கே சமர்ப்பிக்க வேண்டும். அவரின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐ.என்.எக்ஸ் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்த்தது தவறு.
இதில் குற்றம்சாட்டப்பட்ட அரசின் 6 செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை.சிபிஐ_யின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக 24 மணி நேரம் தூங்கவில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டிய அவர், சிபிஐ கேட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கனவே பதிலளிக்கப்பட்டவை என்று கபில்சிபில் வாதாடினார்.