24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற அரசாணை அனைத்து கடைகளுக்கும் பொருந்தததால் சிறிய வணிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான உத்தரவு பிரபைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பால் இனி எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று பொது மக்கள் நம்பிய நிலையில் இந்த அரசனை எல்லா கடைகளைளுக்கும் பொருந்தாது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன் படி, இரவு முழுவதும் திறக்கும் அனுமதி பெறும் கடைகள் அல்லது நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.இதனால் சாலை ஓரங்களில் இருக்கும் சிறிய கடைகளான டீ கடைகள், பெட்டிக் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், நடைபாதை உணவகங்கள், பழக்கடைகள், காய்கறிக் கடைகள், பலசரக்குக் கடைகள் மற்றும் சிறிய உணவகங்களை 24 மணி நேரமும் நடத்த இயலாது.இவர்கள் 11 மணிக்குள் கடையை மூடியாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.