“சபாஷ்” 24 மணி நேரமும்….. உணவு இலவசம்…. மாநகராட்சி அதிரடி…!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த சமயத்தில், ஓசூரில் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் உணவை வழங்குவார்கள். பணம் கொடுக்கும்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துவார்கள். இந்நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் பல தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி உணவு வழங்கி வந்தன. இந்த செயல் தமிழக அரசால் பாராட்டப்பட்டாலும், இதன் மூலம் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் நீங்கள் வழங்க வேண்டாம் உணவை தயார் செய்வதற்கான பருப்பு, காய்கறி உள்ளிட்டவற்றை பொருட்களாகவும், ஆங்காங்கே உள்ள மாநகராட்சியிடம் கொடுத்தால் அவர்கள் உணவை சமைத்து இலவசமாக வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஓசூர் மாநகராட்சி சாலையோரம் உள்ள மக்களுக்கும், முதியோர்களுக்கும் 24 மணி நேரமும் இலவச உணவை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *