24 மணி நேரம்…. 16 மாவட்டம்…. பரவலாக மழை…. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்  தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ்_ஸூம் , குறைந்தபட்சமாக  27 டிகிரி செல்சியஸ்_ஸூம் பதிவாகியுள்ளது.வெப்ப சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே வளிமண்டல கீழ்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டத்தில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை , நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்கள் லேசான , மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்    என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.