234 தொகுதிகளிலும் இலவச உணவு: விஜய் மக்கள் இயக்கம் அழைப்பு…!!!

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கான வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதை நோக்கிய செயல்பாடுகளை அடுத்தடுத்து நடிகர் விஜய் செய்து வருகிறார். அதன்படி, தமிழகத்தில் மே 28ம் தேதி 234 தொகுதிகளிலும் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய இடங்களில் இலவசமாக மதிய உணவு வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். உலக பட்டினி தின விழிப்புணர்வு நடவடிக்கை என இதை கூறினாலும், அன்றைய தினம் தான் நாடாளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்படுகிறது.