“பானி” புயலால் 233 ரயில்கள் நிறுத்தம்…!!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

பானி புயலுக்காக சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய பெருங்கடலில் கடந்த ஏப்ரல் 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

Image result for பானி புயலு

இந்நிலையில் பெரும் புயலாக மாறிய பானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மே 3_ம் தேதி ஒடிசாவின் கரையை இப்புயல் கடக்கவுள்ளது, இதனால்  சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்கள் மே 4_ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.