23,000 சுவர் விளம்பரம் அழிப்பு….. சென்னை மாநகராட்சி தகவல்….!!

சென்னையில் உள்ள சுவர்களில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரம்  அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் .

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்ற தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்துது அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலில் உள்ளது .

Image result for சென்னை மாநகராட்சி

இதையடுத்து தமிழகம முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதித்துள்ளனர். மேலும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் , அரசு மற்றும் தனியார் சுவர்களில் அரசியல் கட்சிகள்  செய்திருந்த 23,000 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.