23 தலைவர்களுடன் zoom சந்திப்பில் தலைவர்.. நிர்வாணமாக பின்னால் வந்த மனைவி.. பரபரப்பு சம்பவம்..!!

தென்னாபிரிக்காவில் 23 தலைவர்கள் பங்கேற்ற zoom கூட்டத்தில் ஒரு தலைவரின் மனைவி நிர்வாணமாக வந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. 

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தால் முக்கியமான சந்திப்புகள், கலந்துரையாடல் போன்ற அனைத்தும் zoom மீட்டிங் மூலமாக நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமானது zoom. இதன்படி சமீபத்தில் தென்னாபிரிக்காவில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதியன்று கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக 23 தலைவர்கள் zoomல் பங்கேற்று கலந்துரையாடியுள்ளனர்.

அப்போது மீட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் Xollile Ndevu என்பவரின் மனைவி திடீரென்று ஆடைகளின்றி அவரின் பின்னால் வந்து நின்றுள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் சிரித்துள்ளனர். அந்த சமயத்தில் குழு தலைவர் Faith Muthambi என்ற பெண்மணி மட்டும், “தலைவரே உங்களின் பின்னால் இருப்பவர் ஆடை அணியாமல் இருப்பது எங்களுக்கு அப்படியே தெரிகிறது”என்று கூறி  கூட்டத்தை உடனடியாக இடைநிறுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.

மேலும் தலைவரே, மீட்டிங்கில் நீங்கள் இருப்பதை அவர்களிடம் கூறினீர்களா? இதுபோன்ற மீட்டிங் நடைபெறும் போதெல்லாம் இவ்வாறான புகைப்படங்களை நாங்கள் காண வேண்டியுள்ளது. நீங்கள் நேரலையில் இருக்கும் சமயத்தில் கவனமுடன் செயல்படுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவமானத்தில் தலை குனிந்து தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் வருத்தமாகவுள்ளது, எனக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை நான் கவனிக்கவில்லை என்று மன்னிப்பு கோரியுள்ளார்.