முன் விரோதம்… விஷம் கலக்கப்பட்ட குடிநீரால் 21 பேர் மயக்கம்… விருத்தாசலத்தில் பரபரப்பு..!!

விருத்தாசலத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 15 அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 21 பேர்  மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரமேஷ் இவர் அப்பகுதியில் பெரும் பாலானோருடன் சண்டையிட்டு விரோதத்தை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அவர்களது குடும்பத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரது வீட்டிற்கு செல்லும் குழாயில் வயலுக்குத் தெளிக்க  கூடிய குருணை பூச்சி மருந்தை கலந்துள்ளனர்.

Image result for விஷம் கலந்த குடிநீர்

இதனை குடித்த ரமேஷ் அவர்களது குடும்பத்தினர் 6 பேர் வரிசையாக மயங்கி விழ விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரமேஷ் வீட்டிற்கு செல்லும் தண்ணீர் குழாயில் கலக்கப்பட்ட குருணை மருந்து அவர் வீட்டிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய அரசு பள்ளிக்கு செல்லும் குடிநீர் குழாயிலும் கலக்கப்பட்டு குடிநீர் தொட்டி முழுவதும் விஷம் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டது. அதனை குடித்த பள்ளி மாணவர்களும் தொடர்ந்து மயங்கி விழ 15 பேர் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர்.

Image result for விஷம் கலந்த குடிநீர்

இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு  செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் குடிநீர் குழாயில் விஷம் கலந்து உள்ளதாகவும், தற்பொழுது அந்த குடிநீர் கிராம பகுதிகள் முழுமைக்கும் பரவி விஷம் கலந்த குடிநீர் நிரப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர். மேலும் மற்ற குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து குடிநீரையும் வெளியேற்றி சுத்திகரித்த நீரை மீண்டும் ஏற்றும் முயற்சியே அப்பகுதி நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்களை போன்று தண்ணீரை குடித்து விட்டு வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் மருத்துவ குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.