என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தபோது மாவட்டம் முழுவதும் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்த 21 பேரை கைது செய்து உள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்த 272 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.