21 மணி நேரத்தில்….. “1 கோடி பார்வையாளர்கள்”….. பட்டையை கிளப்பும் ‘தீ தளபதி’ பாடல்..!!

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் யூடியூப்பில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ அண்மையில் வெளியாகி  82  மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் கையில் கிளாஸ் உடன் தளபதி விஜய் கெத்தாக அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடலை நேற்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வீடியோ ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் எஸ்.டி.ஆர் (சிம்பு) குரலில் அமைந்துள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 21 மணி நேரத்தில் யூடியூப்பில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.