தமிழ்நாட்டில் IPS உள்பட 21 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதேபோல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அசீஷ் ராவத்தும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வ ராஜ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.